இந்தியாவில் வெப்ப அலை ஓய்ந்து, 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.
இந்தியாவில் வெயிலின் தாக்கம் மற்றும் வெப்ப அலைகள் நேற்றுடன் முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும். மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான சூழல் நிலவுவதாகவும், தெற்கு வங்கக்கடலின் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.














