கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கோடை மழையின் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதே மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும், தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் விடாமல் பெய்த கனமழையின் காரணமாக திருவனந்தபுரத்தில் சாலைகளில் வெள்ளம் பெருகியது. மேலும் சில இடங்களில் மரங்கள் சாய்ந்து வீடுகள் மீது விழுந்து […]

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கோடை மழையின் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதே மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும், தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் விடாமல் பெய்த கனமழையின் காரணமாக திருவனந்தபுரத்தில் சாலைகளில் வெள்ளம் பெருகியது. மேலும் சில இடங்களில் மரங்கள் சாய்ந்து வீடுகள் மீது விழுந்து சில வீடுகள் சேதம் அடைந்தன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் 34 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இன்று அதற்கான சாதகமான சூழ்நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு ஜூன் இரண்டாம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மழையின் காரணமாக திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu