2024 ஆம் நிதி ஆண்டுக்கான முதல் தங்கப் பத்திர வெளியீடு

June 19, 2023

மத்திய ரிசர்வ் வங்கி, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கட்டங்களாக தங்கப் பத்திரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முதல் தங்கப் பத்திர வெளியீடு இன்று தொடங்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வரை பொதுமக்கள் தங்கப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த தங்க பத்திர வெளியீடு செப்டம்பர் 11 முதல் 15 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள முதல் கட்ட தங்க பத்திர வெளியீட்டில், ஒரு கிராம் தங்கத்தின் விலை […]

மத்திய ரிசர்வ் வங்கி, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கட்டங்களாக தங்கப் பத்திரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முதல் தங்கப் பத்திர வெளியீடு இன்று தொடங்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வரை பொதுமக்கள் தங்கப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த தங்க பத்திர வெளியீடு செப்டம்பர் 11 முதல் 15 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடங்கப்பட்டுள்ள முதல் கட்ட தங்க பத்திர வெளியீட்டில், ஒரு கிராம் தங்கத்தின் விலை 5926 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய வழியில் தங்க பத்திரங்களை பெற்று, டிஜிட்டல் முறையில் கட்டணங்களை செலுத்துபவர்களுக்கு 50 ரூபாய் சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் ஆகியவற்றில் இந்த தங்க பத்திரங்களுக்கான விண்ணப்ப படிவங்களை பெற்று முதலீடுகளை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கப் பத்திர முதலீட்டுக்கு ஆண்டொன்றுக்கு 2.5% வட்டி வழங்கப்படும். பத்திரங்களின் 8 ஆண்டுகால முதிர்வுக்குப் பிறகு, தங்கத்தின் விலைக்கு நிகரான தொகை வங்கியில் வரவு வைக்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu