2030ம் ஆண்டுக்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் - இஸ்ரோ 

March 16, 2023

2030ம் ஆண்டுக்குள் விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து முதல்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதனிடையே வல்லரசு நாடுகளில் பிரபலமாக இருக்கும் விண்வெளி சுற்றுலா திட்டத்தையும் இஸ்ரோ கையில் எடுக்க உள்ளது. இதனை 2030ம் ஆண்டுக்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், இந்த விண்வெளி சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.6 கோடியாக இருக்கும். […]

2030ம் ஆண்டுக்குள் விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து முதல்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதனிடையே வல்லரசு நாடுகளில் பிரபலமாக இருக்கும் விண்வெளி சுற்றுலா திட்டத்தையும் இஸ்ரோ கையில் எடுக்க உள்ளது. இதனை 2030ம் ஆண்டுக்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், இந்த விண்வெளி சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.6 கோடியாக இருக்கும். இந்த சுற்றுலாவில் பங்கேற்கும் இந்தியர்கள் தங்களை விண்வெளி வீரர் என்று அழைத்துக் கொள்ள முடியும். பொதுவாக இது போன்ற சுற்றுலாவில் விண்வெளியின் விளிம்பில் 15 நிமிடங்கள் பயணிகள் செலவிட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu