ஹைபிரிட் ராக்கெட்டை வடிவமைக்கும் தமிழகத்தின் புத்தாக்க நிறுவனம்

தமிழ்நாட்டை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா என்ற நிறுவனம் விண்வெளி துறையில் செயல்பட்டு வரும் புத்தாக்க நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஹைபிரிட் ராக்கெட் ஒன்றை உருவாக்கி வருகிறது. RHUMI 1 என்று பெயரிடப்பட்டுள்ள ஸ்பேஸ் ஜோன் இந்தியாவின் ராக்கெட் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ராக்கெட்டில் 3 க்யூப் சாட்டிலைட்டுகளை எடுத்துச் செல்ல முடியும். மேலும், திட எரிபொருள் மற்றும் திரவ எரிபொருள் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி […]

தமிழ்நாட்டை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா என்ற நிறுவனம் விண்வெளி துறையில் செயல்பட்டு வரும் புத்தாக்க நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஹைபிரிட் ராக்கெட் ஒன்றை உருவாக்கி வருகிறது.

RHUMI 1 என்று பெயரிடப்பட்டுள்ள ஸ்பேஸ் ஜோன் இந்தியாவின் ராக்கெட் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ராக்கெட்டில் 3 க்யூப் சாட்டிலைட்டுகளை எடுத்துச் செல்ல முடியும். மேலும், திட எரிபொருள் மற்றும் திரவ எரிபொருள் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி ஹைபிரிட் வகையில் இதனை இயக்க முடியும். ஸ்பேஸ் ஜோன் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் மேகலிங்கம், “இந்தியாவில் குறைந்த உயரத்தில் நிறுவப்படும் செயற்கைக்கோள் தேவைகள் அதிகரித்துள்ளன. வணிகமயமாக்கப்பட்டு வரும் இந்த துறையில் கால் பதிக்கும் விதமாக, இந்த ராக்கெட்டை உருவாக்கி வருகிறோம். இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்பார்வையில், இந்த ராக்கெட் சோதனை செய்யப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் சென்னை கடற்கரை பகுதியில் இருந்து இந்த ராக்கெட்டை ஏவ திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu