ஸ்பேஸ் எக்ஸ் - ஒன் வெப் செயற்கைக்கோள் திட்டத்தின் இறுதி ஏவுதல் பணி வெற்றி

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பிரிட்டனைச் சேர்ந்த ஒன் வெப் நிறுவனத்திற்கு செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறது. மூன்று கட்டங்களாக செயற்கைக்கோள்கள் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தன. அதன்படி, தனது மூன்றாவது மற்றும் இறுதி செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை, ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. மார்ச் 9ம் தேதி, ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 40 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. கேப் கணவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து மதியம் 2:13 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட 90 நிமிடங்களில், செயற்கைக்கோள்கள் […]

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பிரிட்டனைச் சேர்ந்த ஒன் வெப் நிறுவனத்திற்கு செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறது. மூன்று கட்டங்களாக செயற்கைக்கோள்கள் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தன. அதன்படி, தனது மூன்றாவது மற்றும் இறுதி செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை, ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. மார்ச் 9ம் தேதி, ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 40 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கேப் கணவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து மதியம் 2:13 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட 90 நிமிடங்களில், செயற்கைக்கோள்கள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்றன. அனைத்து செயற்கை கோள்களும் குறைந்த உயரத்தில் பூமியை சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டவை ஆகும். வெளியேறிய அனைத்து செயற்கைக்கோள்களுடனும் தொடர்பில் உள்ளதாக ஒன் வெப் தெரிவித்துள்ளது. மேலும், செயற்கைக்கோள்கள் வெளியேறிய பிறகு, ஃபால்கன் 9 ராக்கெட் மீண்டும் கேப் கணவரல் ராக்கெட் ஏவுதளத்தில் பத்திரமாகத் தரையிறங்கியது. எனவே, இந்த செயற்கைக்கோள் திட்டம் முழுமை அடைந்துள்ளதாகவும், வெற்றி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu