நாசாவின் கருவியுடன் இன்டெல்சாட் செயற்கைக் கோளை நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் வர்த்தக செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்வெளியில் நிறுவியுள்ளது. இதனுடன் சேர்த்து,, நாசாவின் புவி ஆய்வு கருவியும் சுற்றுவட்டப் பாதையில் நிறுவப்பட்டுள்ளது. ஃப்ளோரிடாவில் உள்ள கேப் கணவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 12:30 மணியளவில் பால்கன் 9 ராக்கெட் மூலம் இன்டெல்சாட் எனப்படும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம், பால்கன் 9 ராக்கெட்டின் முதல் நிலை பகுதி 4வது பயணத்தை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் வர்த்தக செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்வெளியில் நிறுவியுள்ளது. இதனுடன் சேர்த்து,, நாசாவின் புவி ஆய்வு கருவியும் சுற்றுவட்டப் பாதையில் நிறுவப்பட்டுள்ளது.

ஃப்ளோரிடாவில் உள்ள கேப் கணவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 12:30 மணியளவில் பால்கன் 9 ராக்கெட் மூலம் இன்டெல்சாட் எனப்படும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம், பால்கன் 9 ராக்கெட்டின் முதல் நிலை பகுதி 4வது பயணத்தை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவப்பட்ட 32.5 நிமிடங்கள் கழித்து, இன்டெல்சாட் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இதனுடன், பூமியில் உள்ள காற்று மாசுவை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நாசாவின் TEMPO (Tropospheric Emissions Monitoring of Pollution) விண்ணில் செலுத்தப்பட்டது. இது, புற ஊதா கதிர்கள் மற்றும் அகச்சிவப்பு கதிர்களை அளந்து, ட்ரொபோஸ்பியர் மாசுவை அளவிட உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu