ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், டிசம்பர் 23, 2024 அன்று, நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 21 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள், ஃபால்கன் 9 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த ராக்கெட்டின் முதல் நிலை, அட்லாண்டிக் கடலில் உள்ள "ஜஸ்ட் ரீட் தி இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்" என்ற கப்பலில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இது இந்த ராக்கெட்டின் 15வது பயணமாகும்.
தற்போது, ஸ்டார்லிங்க் அமைப்பில் 6,800-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புதிதாக செலுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்களில் 13 செயற்கைக்கோள்கள், நேரடியாக செல்போன்களுக்கு இணைய சேவையை வழங்கும் திறன் கொண்டவை.