விண்ணை அடைந்த பிறகு வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

November 20, 2023

உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வடிவமைத்திருந்தது. ஸ்டார்ஷிப் என்று பெயரிடப்பட்ட இந்த ராக்கெட்டின் இரண்டாம் பரிசோதனை சனிக்கிழமை நிகழ்த்தப்பட்டது. அப்போது விண்ணை சென்றடைந்த சில நொடிகளில் ராக்கெட் வெடித்து சிதறியது. கடந்த ஏப்ரல் மாதத்தில், உலகின் மிகப்பெரிய, அதிக எடையுள்ள ஸ்டார்ஷிப் ராக்கெட், தனது முதல் பரிசோதனையை மேற்கொண்டது. அப்போது, ராக்கெட்டின் 2 பாகங்கள் முறையாக பிரிய தவறி, ராக்கெட் ஏவப்பட்ட சில நொடிகளில், விண்வெளிக்கு செல்லும் முன்பாகவே வெடித்து சிதறியது. அதன் பிறகு, […]

உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வடிவமைத்திருந்தது. ஸ்டார்ஷிப் என்று பெயரிடப்பட்ட இந்த ராக்கெட்டின் இரண்டாம் பரிசோதனை சனிக்கிழமை நிகழ்த்தப்பட்டது. அப்போது விண்ணை சென்றடைந்த சில நொடிகளில் ராக்கெட் வெடித்து சிதறியது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், உலகின் மிகப்பெரிய, அதிக எடையுள்ள ஸ்டார்ஷிப் ராக்கெட், தனது முதல் பரிசோதனையை மேற்கொண்டது. அப்போது, ராக்கெட்டின் 2 பாகங்கள் முறையாக பிரிய தவறி, ராக்கெட் ஏவப்பட்ட சில நொடிகளில், விண்வெளிக்கு செல்லும் முன்பாகவே வெடித்து சிதறியது. அதன் பிறகு, பல்வேறு மாறுதல்கள் கொண்டு வரப்பட்டு, வெள்ளிக்கிழமை ராக்கெட் ஏவப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதன் பின்னர், சனிக்கிழமை ராக்கெட் ஏவும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. சனிக்கிழமை அன்று, டெக்சாஸ் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது. ராக்கெட்டின் முதல் நிலை பிரிந்தவுடன், அந்த பாகம் மெக்சிகோ வளைகுடாவை எட்டும் முன்னர் வெடித்து சிதறியது. அதே வேளையில், ராக்கெட்டின் முதன்மை பூஸ்டர் பாகம் வெற்றிகரமாக விண்வெளிக்குள் நுழைந்தது. கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு பிறகு அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இறுதியில், ராக்கெட் வெடித்து சிதறியது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த அபார முயற்சிக்கு நாசா பாராட்டு தெரிவித்துள்ளது. நாசா நிர்வாகி பில் நெல்சன், முந்தைய பரிசோதனையை விட தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்த விண்வெளி திட்டங்களில் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை பயன்படுத்தும் காலம் வரும் என நம்புவதாகவும் கூறியுள்ளார். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதே முக்கியமானது என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu