4700 கிலோ எடை கொண்ட இந்திய செயற்கைக்கோளை நிறுவியது ஸ்பேஸ் எக்ஸ்

November 19, 2024

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஜிசாட்-என்2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் நவம்பர் 18 அன்று அமெரிக்காவின் கேப் கனாவரல் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டின் முதல் நிலை 8.5 நிமிடங்களில் திரும்பி வந்து ஸ்பேஸ் எக்ஸ் ட்ரோன் கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சுமார் 4700 கிலோ எடையுள்ள ஜிசாட்-என்2 செயற்கைக்கோள் ஏவப்பட்ட 34 நிமிடங்களுக்குப் பிறகு புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஜிசாட்-என்2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் நவம்பர் 18 அன்று அமெரிக்காவின் கேப் கனாவரல் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டின் முதல் நிலை 8.5 நிமிடங்களில் திரும்பி வந்து ஸ்பேஸ் எக்ஸ் ட்ரோன் கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

சுமார் 4700 கிலோ எடையுள்ள ஜிசாட்-என்2 செயற்கைக்கோள் ஏவப்பட்ட 34 நிமிடங்களுக்குப் பிறகு புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. பின்னர் இது பூமியிலிருந்து 22,236 மைல்களுக்கு மேல் உள்ள புவிசார் சுற்றுப்பாதைக்கு நகர்ந்து இந்தியாவின் தொலைதூரப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் இணைய சேவையை வழங்கும். நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த செயற்கைக்கோள் 14 ஆண்டுகள் செயல்படும் திறன் கொண்டது. இதுவரை ஏரியன் ஸ்பேஸ் மூலமாகவே இஸ்ரோ தனது கனமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த முதல் முயற்சி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu