புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளிப் படை நிலையத்தில் இருந்து இன்று டிசம்பர் 16, இரவு 7:51 மணிக்கு EDT (டிசம்பர் 17 அன்று 12:51 a.m. GMT) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் RRT-1 பணி ஏவப்பட உள்ளது. அதிக காற்று காரணமாக கடந்த டிசம்பர் 13ஆம் தேதி ஏவப்பட்ட இருந்த RRT-1 திட்டம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
GPS 3-10 செயற்கைக்கோள் என நம்பப்படும் பேலோட் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் சுமந்து செல்லப்படும். ராக்கெட்டின் முதல் நிலை அட்லாண்டிக் கடலில் உள்ள எ ஷார்ட் ஃபால் ஆஃப் கிராவிடாஸ் என்ற ட்ரோன் கப்பல் மீது தரையிறங்கும். ஏவல் தொடங்கி சுமார் 90 நிமிடங்களில் பேலோட் சுற்றுப்பாதையை அடையும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.