அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA-வின் துணை நிறுவனமான FAA (Federal Aviation Administration), எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலத்தை அடிக்கடி ஏவ அனுமதி வழங்கியுள்ளது.
டெக்சாஸில் உள்ள ஸ்டார்பேஸ் என்ற இடத்தில் இருந்து ஸ்டார்ஷிப் விண்கலம் ஏவப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு 5 முறை மட்டுமே இந்த விண்கலத்தை ஏவ அனுமதி இருந்த நிலையில், இனி 2025ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 25 முறை வரை ஏவலாம் என FAA அனுமதி வழங்கியுள்ளது. மேலும், விண்கலம் திரும்பி வந்து தரையிறங்கும்போது, லாஞ்ச் டவரில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு கருவியின் மூலம் பிடித்து நிறுத்தும் வசதியையும் FAA அனுமதித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நடந்த சோதனையில் இந்த கருவி வெற்றிகரமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அனுமதி குறித்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இருப்பினும், FAA-வின் விதிகள் மிகவும் கடுமையாக இருப்பதாகவும், இதனால் ஸ்டார்ஷிப் விண்கலத்தை மேம்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.