நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து சைக் என்ற விண்கல் திட்டத்தை செயல்படுத்த இருந்தன. புதன்கிழமை இதற்கான ராக்கெட் ஏவப்படுவதாக இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நேரப்படி இன்று மாலை 7:49 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என கூறப்பட்டுள்ளது. ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட், சைக் விண்கலத்தை சுமந்து செல்கிறது. இந்த விண்கலம் சுமார் 6 வருடங்கள் பயணித்து, குறிப்பிட்ட விண்கல்லை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் ஆராய்ச்சி, பல்வேறு விண்வெளி அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கான விடைகளைத் தரும் என நம்பப்படுகிறது.