நாசா ஸ்பேஸ் எக்ஸ் இணையும் சைக் விண்கல் திட்டம் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைப்பு

October 13, 2023

நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து சைக் என்ற விண்கல் திட்டத்தை செயல்படுத்த இருந்தன. புதன்கிழமை இதற்கான ராக்கெட் ஏவப்படுவதாக இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நேரப்படி இன்று மாலை 7:49 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என கூறப்பட்டுள்ளது. ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட், சைக் விண்கலத்தை சுமந்து செல்கிறது. இந்த விண்கலம் சுமார் 6 வருடங்கள் பயணித்து, […]

நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து சைக் என்ற விண்கல் திட்டத்தை செயல்படுத்த இருந்தன. புதன்கிழமை இதற்கான ராக்கெட் ஏவப்படுவதாக இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நேரப்படி இன்று மாலை 7:49 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என கூறப்பட்டுள்ளது. ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட், சைக் விண்கலத்தை சுமந்து செல்கிறது. இந்த விண்கலம் சுமார் 6 வருடங்கள் பயணித்து, குறிப்பிட்ட விண்கல்லை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் ஆராய்ச்சி, பல்வேறு விண்வெளி அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கான விடைகளைத் தரும் என நம்பப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu