முதல் தனியார் விண்வெளி நடைப்பயணத்தை உள்ளடக்கிய ஸ்பேஸ் எக்ஸ் -ன் போலரிஸ் டான் விண்வெளிப் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தரை புறத்தில் உள்ள குளிர்விக்கும் குழாயில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 27) திட்டமிடப்பட்டிருந்த விண்ணேற்றம், நாளை (ஆகஸ்ட் 28) அதிகாலை 3:38 மணிக்கு EDT நேரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பில்லியனர் ஜாரெட் ஐசக்மனின் தலைமையில் நடைபெறும் இந்த விண்வெளிப் பயணம், போலரிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து 870 மைல்கள் தொலைவிற்கு அழைத்துச் செல்கிறது. கடந்த 1972-ம் ஆண்டில் பயணப்பட்ட அப்போல்லோ 17 விண்கலத்திற்கு பிறகு அதிக தொலைவுக்கு திட்டமிடப்பட்டுள்ள மனித விண்வெளி பயணம் இதுவாகும். எனவே, வரலாற்று ரீதியாக இந்த திட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.