விண்வெளி வீரர்கள் விண்கலத்துக்கு வெளியே சென்று விண்வெளி நடைபயணத்தில் ஈடுபடுவதற்கு பிரத்தியேக உடை தயாரிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த உடையை தயாரித்துள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் போலாரிஸ் டான் திட்டத்திற்காக இந்த உடை பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
போலாரிஸ் டான் திட்டத்தில், முதல்முறையாக 4 விண்வெளி வீரர்கள் ஒரே நேரத்தில் விண்கலத்துக்கு வெளியே செல்கின்றனர். விண்வெளியின் வெற்றிடத்தை அனுபவிக்க உள்ளனர். இதற்காக, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள உடையில் 3டி பிரிண்டட் ஹெல்மெட் இடம்பெற்றுள்ளது. இந்த ஹெல்மெட் மூலம், நடை பயணத்தின் போது கண்ணை கூசும்படியான ஒளியிலிருந்து விண்வெளி வீரர்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.