தனியார் விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் - வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஆக்சியம் 2 திட்டத்தின் படி, நேற்று மதியம், தனியார் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கணவரல் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தப்பட்ட ராக்கெட்டில், வீரர்கள் வெற்றிகரமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு வார காலம் விண்வெளியில் தங்கி இருந்து ஆராய்ச்சி மேற்கொள்வர் என கூறப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த திட்டத்தில், சவுதி அரேபியாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, சவுதி […]

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஆக்சியம் 2 திட்டத்தின் படி, நேற்று மதியம், தனியார் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கணவரல் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தப்பட்ட ராக்கெட்டில், வீரர்கள் வெற்றிகரமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு வார காலம் விண்வெளியில் தங்கி இருந்து ஆராய்ச்சி மேற்கொள்வர் என கூறப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த திட்டத்தில், சவுதி அரேபியாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, சவுதி அரேபியாவின் முதல் விண்வெளி வீராங்கனை ரயனா பர்னாவி இதில் இடம் பெற்றுள்ளார். அவர் ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சவூதி அரேபிய பெண்களின் கனவுகள் மற்றும் நம்பிக்கைகளின் பிரதிநிதியாக அவர் கூறப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த அலி அல்கர்னி மற்றொரு வீரராக விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார். சவுதி அரேபிய வீரர்களுடன் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சன் மற்றும் விமானி ஜான் சோப்னர் ஆகியோர் இந்த திட்டத்தில் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu