20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், புதிதாக 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. கடந்த ஜூன் 4ம் தேதி இரவு, ஃபுளோரிடாவில் உள்ள கேப் கணவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. பால்கன் 9 சுமந்து சென்ற செயற்கைக்கோள்கள், சரியாக 52 நிமிடங்களுக்கு பிறகு நிறுவப்பட்டன. இது பால்கன் 9 ராக்கெட் பூஸ்டரின் 20 வது ஏவுதல் ஆகும். ராக்கெட் கிளம்பிய 8.5 நிமிடங்களில் திட்டமிட்டபடி பூஸ்டர் பூமிக்கு திரும்பியது. இந்த […]

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், புதிதாக 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது.

கடந்த ஜூன் 4ம் தேதி இரவு, ஃபுளோரிடாவில் உள்ள கேப் கணவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. பால்கன் 9 சுமந்து சென்ற செயற்கைக்கோள்கள், சரியாக 52 நிமிடங்களுக்கு பிறகு நிறுவப்பட்டன. இது பால்கன் 9 ராக்கெட் பூஸ்டரின் 20 வது ஏவுதல் ஆகும். ராக்கெட் கிளம்பிய 8.5 நிமிடங்களில் திட்டமிட்டபடி பூஸ்டர் பூமிக்கு திரும்பியது. இந்த முறை ஏவப்பட்ட 20 செயற்கை கோள்களில் 13 செயற்கை கோள்கள் நேரடியாக ஸ்மார்ட்போன் தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதற்காக நிறுவப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து, நிகழாண்டில் 58 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவியுள்ளது. அதில் 41 செயற்கைக்கோள்கள் ஸ்டார்லிங்க் கூட்டமைப்பின் பகுதியாக நிறுவப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu