இன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் 23 செயற்கைக்கோள்கள் ஸ்டார் லிங்க் கூட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 12:00 மணி அளவில் வாண்டன்பர்க் ஏவுதளத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, ஃபுளோரிடா ஏவுதளத்திலிருந்து 23 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. உடனடியாக, அடுத்த கட்ட செயற்கைக்கோள் ஏவுதலையும் நிகழ்த்தியுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இந்த முறை, செயற்கைக்கோள்களை எடுத்துச் சென்ற பால்கன் 9 ராக்கெட் 17வது முறையாக ஏவப்படுகிறது. மேலும், செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்ட பிறகு, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் தளத்தில் பூஸ்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது.