ஸ்டார்ஷிப் திட்டம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு - ஸ்பேஸ் எக்ஸ்

இதுவரை வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டுகளிலேயே வலிமையான ராக்கெட் ஆக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ள ஸ்டார்ஷிப் சொல்லப்பட்டுள்ளது. இந்த ராக்கெட், நேற்று முதல் முறையாக ஏவப்பட இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 20 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார் ஸ்பேஸ் ஏவுதளத்தில் இருந்து இது ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மாலை 6:58 முதல் 8 மணிக்குள் ராக்கெட் ஏவப்படும் என கூறப்பட்டுள்ளது. நேற்று திட்டமிடப்பட்டிருந்த ராக்கெட் ஏவுதல், 9 நிமிடங்களுக்கு முன்பாக […]

இதுவரை வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டுகளிலேயே வலிமையான ராக்கெட் ஆக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ள ஸ்டார்ஷிப் சொல்லப்பட்டுள்ளது. இந்த ராக்கெட், நேற்று முதல் முறையாக ஏவப்பட இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 20 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார் ஸ்பேஸ் ஏவுதளத்தில் இருந்து இது ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மாலை 6:58 முதல் 8 மணிக்குள் ராக்கெட் ஏவப்படும் என கூறப்பட்டுள்ளது.

நேற்று திட்டமிடப்பட்டிருந்த ராக்கெட் ஏவுதல், 9 நிமிடங்களுக்கு முன்பாக நிறுத்தப்பட்டது. ராக்கெட்டின் முதல் நிலையில் உள்ள அழுத்த நிலையில் கோளாறு ஏற்பட்டதால் ராக்கெட் ஏவும் பணி நிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது. ஸ்டார்ஷிப் விண்கலத்தை சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்திய பிறகு, ராக்கெட் மீண்டும் ஏவுதளத்திற்கு வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ராக்கெட் மீண்டும் தரையிறங்குவது வியாழன் என்று சோதிக்கப்படாது எனவும், அதற்கு மாற்றாக, மெக்சிகோ வளைகுடாவில் இது விழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu