ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டுக்கு அனுமதி

இதுவரை தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் மிகவும் வலிமையானதாக சொல்லப்பட்டுள்ளது. தற்போது, இந்த ராக்கெட்டுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஆளில்லா முறையில் இந்த ராக்கெட்டை செலுத்தி சோதனை செய்வதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ராக்கெட்டின் தரையிறங்கும் சோதனை நடத்தப்பட்டு விட்டது. தற்போது, திங்கள் அன்று ராக்கெட் ஏவும் சோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை சோதனை செய்வதற்கு தேவையான பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்து கூறுகளையும் ஸ்பேஸ் எக்ஸ் […]

இதுவரை தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் மிகவும் வலிமையானதாக சொல்லப்பட்டுள்ளது. தற்போது, இந்த ராக்கெட்டுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஆளில்லா முறையில் இந்த ராக்கெட்டை செலுத்தி சோதனை செய்வதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ராக்கெட்டின் தரையிறங்கும் சோதனை நடத்தப்பட்டு விட்டது. தற்போது, திங்கள் அன்று ராக்கெட் ஏவும் சோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டை சோதனை செய்வதற்கு தேவையான பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்து கூறுகளையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முறைப்படுத்தி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, ராக்கெட் சோதனைக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சில வான் எல்லைக்குள், விமானங்கள் பறப்பதற்கு அந்த சமயத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ஷிப் ராக்கெட், மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்லும் திட்டத்தில் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu