விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களுக்குள் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறியது.
எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட், விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களுக்குள் வெடித்து சிதறியது. இந்த ஏவுதல் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது, அதில் ராக்கெட்டின் எஞ்சின்கள் செயலிழந்து, தெற்கு ஃபுளோரிடா மற்றும் பஹாமஸ் அருகில் வெடித்தது. இதன் காரணமாக மியாமி, ஃபோர்லாடர்டேல், பாம் பீச் மற்றும் ஆர்லாண்டோ விமான நிலையங்களில் தரைவழி போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஸ்பேஸ் எக்ஸ் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு, "திடீர் பிரிதலால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது," என்று தெரிவித்தது. மேலும், "இன்றைய சோதனை எங்களுக்குப் புதிய பாடங்களை வழங்கும், இது ஸ்டார்ஷிப் திட்டத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும்," என நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.