100 பழைய ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை செயலிழக்க ஸ்பேஸ் எக்ஸ் திட்டம்

February 14, 2024

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கூட்டமைப்பை கட்டமைத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது பழையதாகி போன கிட்டத்தட்ட 100 ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களை செயலிழக்க திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 12 அன்று வெளியான அறிக்கையில் இது பற்றி கூறப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குறிப்பிட்ட சில பழைய செயற்கைக்கோள்களில், சிறிய கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், எதிர்காலத்தில் செயற்கைக்கோள்கள் செயலிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. எனவே, இவற்றை தாமாக செயலிழக்க செய்து, பூமிக்குள் பாதுகாப்பாக […]

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கூட்டமைப்பை கட்டமைத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது பழையதாகி போன கிட்டத்தட்ட 100 ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களை செயலிழக்க திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 12 அன்று வெளியான அறிக்கையில் இது பற்றி கூறப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குறிப்பிட்ட சில பழைய செயற்கைக்கோள்களில், சிறிய கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், எதிர்காலத்தில் செயற்கைக்கோள்கள் செயலிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. எனவே, இவற்றை தாமாக செயலிழக்க செய்து, பூமிக்குள் பாதுகாப்பாக தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, அடுத்த 6 மாத காலத்தில் செயற்கைக்கோள்கள் தங்கள் சுற்றுவட்ட பாதை தொலைவை குறைத்துக் கொண்டே வந்து, இறுதியில் பூமியில் விழும். அதன் போது, பூமியில் பாதிப்புகள் எதுவும் நேராமல் இருக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளிக்கிறோம். - இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu