பல்வேறு தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள்களை சுமந்தபடி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிரான்ஸ்போர்ட்டர் 10 திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் கலிபோர்னியாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ட்ரான்ஸ்போர்ட்டர் 10 புறப்பட்டது.
டிரான்ஸ்போர்ட் 10 திட்டத்தில் மொத்தம் 53 சுமை பாகங்கள் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. க்யூப் சாட், நானோ சாட் வகைகளை சேர்ந்த பல்வேறு செயற்கைக்கோள்கள் இதில் அடங்கும். அத்துடன், ஏபெக்ஸ் என்ற விண்கல உற்பத்தியாளர் உருவாக்கிய செயற்கைக்கோள்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ராக்கெட் புறப்பட்டு 7 நிமிடங்கள் கழித்து முதல் பூஸ்டர் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 280 வது வெற்றிகரமான பூஸ்டர் நிலை நிறுத்தம் ஆகும். அத்துடன், தொடர்ச்சியாக 205 ஆம் முறையாக, பூஸ்டர் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.