ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிரான்ஸ்போர்ட்டர் 8 திட்டம் மாபெரும் வெற்றி

நேற்று முன்தினம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது பால்கன் 9 ராக்கெட் மூலம் டிரான்ஸ்போர்ட்டர் 8 திட்டத்தை செயல்படுத்தியது. திங்கட்கிழமை மதியம் 2;35 மணி அளவில், கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பர்க் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்டது. இது டிரான்ஸ்போர்ட்டர் திட்டத்தின் 8வது விண்வெளி பயணம் ஆகும். அதே வேளையில், ஃபால்கன் 9 ஸ்டேஜ் பூஸ்டருக்கு, இது 9வது பயணம் ஆகும். மேலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு இது 200 வது ராக்கெட் ஏவும் முயற்சியாகும். எனவே, டிரான்ஸ்போர்ட்டர் […]

நேற்று முன்தினம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது பால்கன் 9 ராக்கெட் மூலம் டிரான்ஸ்போர்ட்டர் 8 திட்டத்தை செயல்படுத்தியது. திங்கட்கிழமை மதியம் 2;35 மணி அளவில், கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பர்க் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்டது. இது டிரான்ஸ்போர்ட்டர் திட்டத்தின் 8வது விண்வெளி பயணம் ஆகும். அதே வேளையில், ஃபால்கன் 9 ஸ்டேஜ் பூஸ்டருக்கு, இது 9வது பயணம் ஆகும். மேலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு இது 200 வது ராக்கெட் ஏவும் முயற்சியாகும். எனவே, டிரான்ஸ்போர்ட்டர் திட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இந்த முறை, 72 விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. கியூப்சாட், மைக்ரோசாட் உள்ளிட்ட பல்வேறு விண்கலங்கள் இதில் அடங்கும். ராக்கெட் கிளம்பிய ஒரு மணி நேரத்தில், பூமியில் இருந்து 500 கிலோ மீட்டர் உயரத்தில் செயற்கை கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu