ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சக்தி வாய்ந்த ராக்கெட் என்று அழைக்கப்படும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் முக்கிய பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் 3வது பரிசோதனை அண்மையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் போது, ராக்கெட் நிலத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதன் எஞ்சின் இயக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தெற்கு டெக்சாஸ் ஏவுதளத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஷிப் 28 என்று அழைக்கப்படும் ஸ்டார்ஷிப் வாகனம், எரியூட்டப்பட்டு, நின்ற நிலையில் இயக்கப்பட்டது. பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், இன்ஜினின் செயல் திறனை ஆய்வு செய்தனர். மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் வடிவமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.