ஸ்பெயினில் கனமழை - 213 பேர் பலி

November 4, 2024

ஸ்பெயினில் கனமழை காரணமாக 213 பேர் பலியாகினர். ஸ்பெயினில் கனமழை பெருக்கெடுத்து, பல மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஒரே நாளில் ஒராண்டு மழை அளவுக்கு நீர் பெய்து, கஸ்டிலா லா மஞ்சா மற்றும் அண்டலுசியா பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் பெருக்கெடுத்து, நகரங்களின் பல பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அவதியுறுகின்றனர். மேலும் பெரும்பாலான சாலைகள் மற்றும் ரயில்வே சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள குழுக்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள் மற்றும் கட்டிட இடிபாடுகளை […]

ஸ்பெயினில் கனமழை காரணமாக 213 பேர் பலியாகினர்.

ஸ்பெயினில் கனமழை பெருக்கெடுத்து, பல மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஒரே நாளில் ஒராண்டு மழை அளவுக்கு நீர் பெய்து, கஸ்டிலா லா மஞ்சா மற்றும் அண்டலுசியா பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் பெருக்கெடுத்து, நகரங்களின் பல பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அவதியுறுகின்றனர். மேலும் பெரும்பாலான சாலைகள் மற்றும் ரயில்வே சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள குழுக்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள் மற்றும் கட்டிட இடிபாடுகளை அகற்றுகின்றனர். வலென்சியா மற்றும் அண்டலூசியா உள்ளிட்ட மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போதைய மரண எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் மாயமாகியிருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் மன்னர் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்றபோது, பொதுமக்கள் அவரை மண்ணால் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu