மக்களவை சபாநாயகர் தேர்தல் வருகிற ஜூன் 26 ஆம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வருகிற ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற ஜூன் 26 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சபாநாயகர் பதவிக்கு ஆளும் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி குறிவைத்து வருகின்றன. மேலும் சபாநாயகர் பதவிக்கான போட்டியில் வேட்பாளர்களை நிறுத்த பாஜகவும் முடிவு செய்துள்ளது. இது தவிர இந்தியா கூட்டணி கட்சிகளின் பொது வேட்பாளர்களை நிறுத்த தீவிரம் காட்டி வருகிறது














