சென்னையில் இருந்து ஆயுத பூஜை சிறப்பு தினத்தை முன்னிட்டு 2265 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆயுத பூஜை பண்டிகை வரும் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திங்கள்கிழமையாக உள்ளது. ஏற்கனவே சனி,ஞாயிறு விடுமுறை தினத்தை ஒட்டி திங்கட்கிழமை நாளில் ஆயுத பூஜை வருவதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை நாளாகும். அதேபோல விஜயதசமி அன்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறையாகவும் உள்ளது. எனவே சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு அதிக பயணிகள் பயணம் செய்வார்கள். இதனால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை, பெங்களூரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளில் இருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சாதாரண நாட்களில் 2100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பண்டிகை தினத்தன்று 2265 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.