சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

November 14, 2022

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம். அவர்களின் வசதி கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு வருகிற 17ந்தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தில் […]

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம். அவர்களின் வசதி கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு வருகிற 17ந்தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதே போல், சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu