பழனி மற்றும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

January 23, 2024

பழனி மற்றும் திருவண்ணாமலைக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி தைப்பூசம் மற்றும் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது. 26 ஆம் தேதி குடியரசு தினம் மற்றும் 27,28 ஆகிய தேதிகள் வார விடுமுறை என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இந்நிலையில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி பழனி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு […]

பழனி மற்றும் திருவண்ணாமலைக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி தைப்பூசம் மற்றும் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது. 26 ஆம் தேதி குடியரசு தினம் மற்றும் 27,28 ஆகிய தேதிகள் வார விடுமுறை என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இந்நிலையில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி பழனி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு நாளை முதல் 28ஆம் தேதி வரை 5 நாட்கள் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu