கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.கார்த்திகை தீபத்திருநாள் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் 27 .11.2023 அன்று பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது. இந்நிலையில் 25.11.2023 சனிக்கிழமை மற்றும் 27.11.2023 திங்கள் கிழமையில் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஆணையிடப்பட்டுள்ளது. அதில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் பெங்களூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒன்பது தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைக்கு சென்று திரும்பி வருவதற்காக வசதியாக 40 கட்டணமில்லா சிற்றுந்துகள் இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.