தமிழக முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு,நீக்கம் முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கான விண்ணப்ப படிவங்களை தேர்தல் துறை அதிகாரிகளிடம் நாளை முதல் அளிக்கலாம். விண்ணப்பிக்க டிசம்பர் ஒன்பதாம் தேதி கடைசி தேதி ஆகும். இதனை அடுத்து நவம்பர் 4,5 மற்றும் 18,19 நாட்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் ஆகிய படிவங்களை அளிக்கலாம். தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படுவார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி ஐந்தாம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.