பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு ஜி பே, போன் பே மூலம் பணப்பட்டுவாடா நடைபெறுவதை தவிர்க்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் பணம் பட்டுவாடா நடக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் வாக்காளர்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பதை தவிர ஜிபே, போன்பே மூலமாகவும் கொடுக்கப்படலாம் என்று கருதப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க வருமானவரித்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி இதற்காக தனித்தனி குழுக்களை உருவாக்கி இருக்கிறார்கள். டிஜிட்டல் பணபரிமாற்றத்தை கண்காணிக்க சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் வருமானவரிதுறை அமைத்துள்ளது.