தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை

தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலமான 2020, 2021ம் ஆண்டுகளில் மக்களின் உயிர்காக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பின்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அத்தியாவசியமான பேருந்து சேவைகளுக்காக பேருந்துகளை இயக்கின. அப்போது பணிபுரிந்த தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடி வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 2022 முதல் ஜூலை 2022 […]

தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காலமான 2020, 2021ம் ஆண்டுகளில் மக்களின் உயிர்காக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பின்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அத்தியாவசியமான பேருந்து சேவைகளுக்காக பேருந்துகளை இயக்கின. அப்போது பணிபுரிந்த தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடி வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 2022 முதல் ஜூலை 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்குவதற்கு தமிழ்நாடு முதல்வர் உத்தரவின் பேரில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu