மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்யும் முகமாக, தமிழ் அரசு பத்திரப்பதிவுத்துறை மூலம் சிறப்பு முகாம்கள் வரும் ஜூலை 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
தமிழக அரசு, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் மக்களின் திருமணங்களை பதிவு செய்ய, 2025 ஜூலை 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய முறையாக 2018ல் ஒரு விசேஷ முகாம் நடத்தப்பட்டதையும், அதன்பின் இணையவழியாகவே திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வந்ததையும் அரசாணை குறிப்பிடுகிறது. தற்போது, மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு நேரடி சேவையளிக்க, அயலக தமிழர் நலத் துறை ஆணையரின் கோரிக்கையின்பேரில், பத்திரப்பதிவுத்துறை முறையான ஏற்பாடுகளை செய்துள்ளது. சனிக்கிழமைகளில் இயங்கும் அலுவலகங்களில் ஜூலை 26 மற்றும் இயங்காத அலுவலகங்களில் ஜூலை 25 அன்று முகாம் நடத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களது திருமணங்களை பதிவு செய்ய விரும்பும் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.