போக்குவரத்து துறை சேலத்தில் இருந்து ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல சிறப்பு சுற்றுலா பேருந்து வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்வதற்காக போக்குவரத்து துறை சிறப்பு சுற்றுலா பேருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஏற்காட்டில் உள்ள கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்ச குட்டை காட்சி முனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஒரு நபருக்கு பேருந்து கட்டணம் ரூபாய் 300 ஆக வசூலிக்கப்படுகிறது. அது இன்றும் முதல் 26 ஆம் தேதி வரை தினமும் காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 7 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தடைகிறது. இதற்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பதிவு மையம் வழியாகவும், www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்