நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் சென்னை சென்ட்ரல் - நெல்லை இடையே மூன்று நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து 8 15 மற்றும் 22ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11:45 மணிக்கு நெல்லை வந்தடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து 9,16 மற்றும் 23 தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.