தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி - சென்னை எழும்பூருக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து பல்வேறு மக்கள் சொந்த ஊருக்கு சென்றனர். அவர்கள் திரும்பி வரும் நிலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது. பின்னர் 29ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு 30ஆம் தேதி மதியம்
2.45 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைகிறது.
அதேபோல் கோவையில் இருந்து 11:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது. பின்னர் 29ஆம் தேதி சென்ட்ரலில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.05 மணிக்கு கோவை சென்றடைகிறது.