தாம்பரம் நாகர்கோவில் இடையே சென்று வரும் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் நாகர்கோவில் இடையே செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து நேற்று மாலை புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று மறுமார்க்கமாக இன்று தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.