தாம்பரம் வேளாங்கண்ணி இடையே செப்டம்பர் 5-ஆம் தேதி தேவாலய திருவிழாவையொட்டி சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தாம்பரம் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்(வண்டி எண்.06031) காலை செப்டம்பர் 5ம் தேதி காலை 10:30 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணியை மறுநாள் காலை 5.45 மணிக்கு சென்றடைகிறது.
இதே போல் மறுமார்க்கமாக( வண்டி எண்.06032) செப்டம்பர் 6ம் தேதி காலை 8.50 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். வேளாங்கண்ணியில் நடைபெறும் தேவாலய திருவிழாவை ஒட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.