கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக தாம்பரம் வழியாக சிறப்பு ரயில் ஒன்றும் சென்னை வழியாக சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கோவை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் வருகிற 31ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை வந்தடையும். அதேபோன்று சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10:20 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8:25 மணிக்கு கோவை சென்றடையும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதேபோன்று தாம்பரம் கொச்சுவேலி சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து 31ஆம் தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடைகிறது. இந்த ரயில் கோவைக்கு அதிகாலை 1. 57 மணிக்கு வந்து இரண்டு மணிக்கு புறப்பட்டு செல்லும். கொச்சிவேலி - தாம்பரத்திலிருந்து கோவை நோக்கி சிறப்பு ரயில் ஏப்ரல் 1-ஆம் தேதி மதியம் புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு கோவை செல்கிறது.