வந்தே பாரத் ரயில் சேவை 24 ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இதற்காக 248 லோகோ மற்றும் உதவி லோகோ பைலட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வந்தே பாரத் ரயில் சேவை தற்போது மூன்று வழித்தடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்குள் 75 வந்தே பாரத் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி 24ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவை நெல்லை- சென்னை வழித்தடம் உட்பட 3 இடங்களில் தொடங்கப்படுகிறது.
இந்த உயர் தொழில்நுட்ப திறன் கொண்ட ரயில்களை இயக்க இதற்காக லோகோ பைலட்டுகள் மற்றும் உதவி லோகோ பைலட்டுகள் என மொத்தம் 248 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கென ரயில் பெட்டி, தொழிற்சாலை மின்சார கருவிகள் பயிற்சி மையம், மற்றும் மின்சார இழுவை பயிற்சி மையங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் இவர்களுக்கு நவீன வசதியுடன் கூடிய ஓட்டுநர் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.














