ஜனவரி 12-ந்தேதி முதல் சென்னையில் இருந்து நெல்லை நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06021) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.
தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06041) மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06057) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும். கேரளாவின் கொச்சு வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி காலை 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06044) மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.