ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், கிரெடிட் சூயஸ் நிதி நிறுவனத்துக்கு 1.5 மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டி இருந்தது. இதனை உடனடியாக செலுத்தாவிட்டால் விளைவுகளை சந்திக்க வேண்டும் என இந்திய நீதிமன்றம் எச்சரித்து இருந்தது. அதன்படி, தற்போது இந்த தொகை முழுவதையும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் செலுத்தி உள்ளது. நேற்றைய தினத்தில், 1.5 மில்லியன் டாலர்கள் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியான பிறகு, இந்திய பங்குச்சந்தையில் ஸ்பைஸ் ஜெட் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.
கிரெடிட் சூயஸ் நிறுவனம், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபடுவதாக இந்திய நீதிமன்றத்தை நாடியது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, செப்டம்பர் 22ஆம் தேதிக்குள், தவணை முறையில், செலுத்த வேண்டிய மொத்த தொகையையும் செலுத்துமாறு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, மொத்த தொகையான 1.5 மில்லியன் டாலர் தொகையும் ஒரே முறையில் செலுத்தப்பட்டுள்ளது.