ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு 900 கோடி நிதி கிடைத்துள்ளது. அதனைக் கொண்டு, விமான நிறுவனத்தின் விமான சேவைகளை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அத்துடன், செலவுகளை குறைக்கும் பல்வேறு சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட உள்ளதாக ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் அவசர கால நிதி உதவி திட்டத்தின் கீழ் 160 கோடி ரூபாய் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. இது, நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் வங்கி சேமிப்பின் ஒரு பகுதியாகும். இது தவிர, தவணை முறையில் அரசின் உதவி பணம் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், ஸ்பைஸ் ஜெட் நிர்வாக இயக்குனர் அஜய் சிங், கூடுதல் நிதியை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமான சேவைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நிறுவனத்தின் மூத்த பணியாளர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.