ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் கிட்டத்தட்ட 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. செலவுகளை குறைக்கும் நடவடிக்கையின் பகுதியாக இந்த பணி நீக்கம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே, செலவுகளை குறைக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் பகுதியாக, கிட்டத்தட்ட 1400 ஊழியர்களை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 15% ஆகும். எனவே, ஆண்டுக்கு 12 மில்லியன் டாலர்கள், அதாவது 100 கோடி அளவில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சேமிப்பு கிடைக்கும். எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.