ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நிறுவனத்தின் நிகர இழப்பு 446.09 கோடி ஆக சரிந்துள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் மொத்த வருவாய் 1725.81 கோடியாக உள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த செலவினங்கள் 2175.24 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், கடந்த செப்டம்பர் மாதத்தில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது கடன்களை திருப்பிச் செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் சிங், கடந்த காலாண்டு சவாலானதாக இருந்ததாகவும், ஆனால் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அதை திறமையாக கையாண்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.