இன்றைய வர்த்தக நாளில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 13% வரை உயர்ந்து வர்த்தகமாகின.
இன்றைய வர்த்தக நாளின் தொடக்கம் முதலே ஸ்பைஸ் ஜெட் பங்குகள் உயர்ந்திருந்தன. கிட்டதட்ட 71.9 ரூபாய் மதிப்பில் நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகமாகின. கடந்த ஜனவரி மாத விமான சந்தை பங்களிப்பு குறித்த அறிக்கையை டிஜிசிஏ வெளியிட்டு இருந்தது. அதில், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தனது சந்தை பங்களிப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இந்தியாவின் மொத்த விமான போக்குவரத்து சந்தையில் 5.6% பங்களிப்பை ஸ்பைஸ் ஜெட் கொண்டுள்ளது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக ஸ்பைஸ் ஸ்டேட் பங்குகள் உயர்ந்து வருகின்றன.