பிரிட்டனில் வீடியோ வகுப்புகளை அறிமுகம் செய்த ஸ்பாட்டிஃபை

இணையவழி கற்றல் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகி வருகிறது. இந்த சூழலில், மியூசிக் ஸ்ட்ரீமிங் தரமான ஸ்பாட்டிஃபை, இந்தத் துறையில் அடி எடுத்து வைத்துள்ளது. பிரிட்டனில், வீடியோ அடிப்படையிலான கற்றல் வகுப்புகளை ஸ்பாட்டிஃபை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பாட்டிஃபை தளத்தில் இசை மற்றும் பாட்காஸ்ட் ஆகியவற்றுக்கு தனி தனி பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது, கூடுதலாக இணைய வழி கற்றல் பிரிவு இடம்பெறவுள்ளது. பிரிட்டனில் மட்டும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படுவதாக ஸ்பாட்டிஃபை தெரிவித்துள்ளது. இதற்காக பிபிசி மேஸ்ட்ரோ, ஸ்கில்சேர், […]

இணையவழி கற்றல் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகி வருகிறது. இந்த சூழலில், மியூசிக் ஸ்ட்ரீமிங் தரமான ஸ்பாட்டிஃபை, இந்தத் துறையில் அடி எடுத்து வைத்துள்ளது. பிரிட்டனில், வீடியோ அடிப்படையிலான கற்றல் வகுப்புகளை ஸ்பாட்டிஃபை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்பாட்டிஃபை தளத்தில் இசை மற்றும் பாட்காஸ்ட் ஆகியவற்றுக்கு தனி தனி பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது, கூடுதலாக இணைய வழி கற்றல் பிரிவு இடம்பெறவுள்ளது. பிரிட்டனில் மட்டும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படுவதாக ஸ்பாட்டிஃபை தெரிவித்துள்ளது. இதற்காக பிபிசி மேஸ்ட்ரோ, ஸ்கில்சேர், திங்கிபிக் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து வீடியோ வகுப்புகளை கொண்டு வர உள்ளது. இணையவழி கற்றல் பிரிவுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பரிசோதிக்க உள்ளதாகவும், அதனைப் பொறுத்து சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்பாட்டிஃபை கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu